கடலூர்: வரி வசூல் 2 பேர் பணியிடை நீக்கம்

64பார்த்தது
கடலூர் மாநகராட்சியில் 2024-25 ஆம் காலாண்டிற்கான வரி மற்றும் வரி இல்லா இனங்களை வசூல் செய்ய அனைத்து வருவாய் உதவியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் நிலுவையில் உள்ள வரிகளை நேரில் சென்று வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் வரிவசூல் செய்யும் பணியின்போது இக்குழுவினர் பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நெருக்கடி செய்கிறார்கள் என்ற புகார் மாநகராட்சிக்கு வந்தது. அதன் அடிப்படையில் வருவாய் உதவியாளர்கள் சுசிலா, மகேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் அனு உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி