கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது வலையில் 150 டன் "பெரும் பாறை" வகையைச் சார்ந்த பாறை மீன்கள் பிடிபட்டது. இதனை அடுத்து அவற்றைப் போராடி மீனவர்கள் கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். இருப்பினும் மீன்களை அதிக அளவில் கரைக்கு கொண்டுவர முடியாமல் 50 டன்கள் மீன்களை கடலிலேயே விட்டு வந்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.