புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3 வாரமாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். நேற்று 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.