குப்பை மற்றும் கழிவுகள் முற்றிலும் அகற்றம்

70பார்த்தது
கடலூர் எஸ். என். சாவடி அருகே உள்ள பள்ளிநேலியனூர் முகப்பு சாலை ஓரத்தில், குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால் அப்பகுதியினர் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை மாநகராட்சி சிட்டி தூய்மை பணியாளர்கள் மூலம் அங்கு கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி