கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு நேரங்களில் கழிப்பறைகள் பூட்டி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து நேரங்களிலும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.