கடலூரில் அம்மன் சுவாமி இரவு வீதியுலா

65பார்த்தது
கடலூர் அருகே கோண்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ். என். சாவடி செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இரவு இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வான வேடிக்கைகளுடன் அம்மன் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் செல்வமுத்து மாரியம்மனுக்கு நாளை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி