கடலூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் தனித்தனியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கே. என். பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் குமாரை கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், ரூபாய் 1200 ரொக்கம் ஆகியவற்றை காவல் ஆய்வாளர் சந்திரன் பறிமுதல் செய்தார். தப்பியோடிய பாதிரிக்குப்பம் சுப்புராயலு மகன் விஸ்வநாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.