ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வு தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது. கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி கே மெட்ரிக் பள்ளி, புனித அண்ணா மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது. இதில் 1404 பேர் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதுகின்றனர் இதில் 4 மையங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பழனி பார்வையிட்டார்.