கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அரிசியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாப்பாட்டு அரிசி 40 ரூபாய் விற்பனையான நிலையில் தற்போது 55 ரூபாய்க்கும், இட்லி அரிசி 36 ரூபாயிலிருந்து 47 ரூபாய்க்கும், பச்சரிசியை 60 ரூபாய், புழுங்கல் அரிசி 62 ரூபாய் என கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலை உயர வாய்ப்புள்ளது.