கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் நேற்று சைக்கிளில் ஆணைவாரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.