கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 6) இரண்டாவது நாளாக தொடர்ந்து 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.