கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. புனித நீர் கலசம் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, படங்கள் புறப்பாடாகி ஆலயத்தை வலம் வந்து, விமான கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.