சிதம்பரத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்

79பார்த்தது
சிதம்பரத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தீர்த்தம் பாளையம் கிராமம் சாலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் குறித்து அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஏஎஸ்பி பி. ரகுபதி பேசுகையில் கோரிக்கை குறித்து யாரிடமும் மனு கொடுக்காமல் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையும், பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் அமர வைத்ததையும் வன்மையாக கண்டித்தார், போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததற்கு யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பினார். பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதியிடம் கோரிக்கை குறித்து மனு எழுதி தருமாறு கோரி அதனை பெற்றுக் கொண்டார். கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி