பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கரும்பு, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும் என்றும், கரும்பின் உயரம் மற்றும் தரம் ஆகியவற்றை சோதித்து பொதுமக்களுக்கு தரமான கரும்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.