கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (30. 10. 2024) காலை 8. 30 மணி நிலவரப்படி காட்டுமன்னார்கோவில் 20 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 13. 2 மில்லி மீட்டர், கடலூர் 11 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 10 மில்லி மீட்டர், லால்பேட்டை 10 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 7. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.