கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (ஜூன் 10) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 62.6 மில்லி மீட்டர், லால்பேட்டை 62 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 58 மில்லி மீட்டர், குப்பநத்தம் 46.8 மில்லி மீட்டர், ஸ்ரீ முஷ்ணம் 39.1 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 35.6 மில்லி மீட்டர், விருத்தாசலம் 34 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 33 மில்லி மீட்டர், மே. மாத்தூர் 31 மில்லி மீட்டர், புவனகிரி 25 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 22 மில்லி மீட்டர், கடலூர் 21.6 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 20.2 மில்லி மீட்டர், வேப்பூர் 13 மில்லி மீட்டர், வடக்குத்து 9 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 8 மில்லி மீட்டர், சிதம்பரம் 4 மில்லி மீட்டர், பண்ருட்டி 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.