காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (08. 06. 2025) காலை 8. 30 மணி நிலவரப்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் 29. 2 மில்லி மீட்டர், லால்பேட்டை 9 மில்லி மீட்டர், பெலாந்துறை 3. 4 மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.