கடலூர்: கடலில் சிக்கவர்களை காவலர்கள் பாதுகாப்பாக மீட்பு

52பார்த்தது
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய கடற்கரை பகுதிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தடுக்கும் பொருட்டு காவல்துறை மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளி கடற்கரையில் வரக்கால்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குடும்பத்தாருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ரமேஷ் மகன் யோகேஷ் பெரிய அலையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் வெற்றிச்செல்வன், இரண்டாம் நிலை காவலர் அலெக்ஸ் ஆகியோர் கடலில் இருந்து மீட்டு அவர்களை முதலுதவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி