கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகை வெகு விமரிசையாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுடன் இணைந்து காவல்துறையினர் 2025 ஆண்டு புத்தாண்டு தினத்தை கேக் வழங்கி கொண்டாடி மகிழ்வித்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.