வருகின்ற 04.01.2025 சனிக்கிழமை மாலை 03.00 மணி அளவில் திருவண்ணாமலை மண்டல தி.மு.க மருத்துவ அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக நீதி (ம) பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, தொகுதி தி.மு.க மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.