கடலூர் மாவட்டம் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஜனவரி 2 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 2232 பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது.