கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் கேட்கையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்திருப்பதால் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.