கடலூர்: அரை கம்பத்தில் பறக்கும் காங்கிரஸ் கொடி

81பார்த்தது
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார். இந்த நிலையில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சி கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி