கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ள தகவலில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பொழிவின் அளவு 1155.61 மில்லி மீட்டர் ஆகும். நடப்பு ஆண்டு (2024) மழை பொழிவின் அளவு சாதாரணமாக 1206.7 மில்லி மீட்டர் பெய்யும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1460.6 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 253.9 மில்லி மீட்டர் கூடுதல் ஆகும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.