கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் பாலூத்தாங்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் மனைவி கலைச்செல்வி என்பவரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.