கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ஆம் தேதியும், ஆருத்ரா தரிசன விழா 13-ஆம் தேதி நடைபெற உள்ளன. விழாவின் 5-ஆவது நாள் தெருவடைச்சான் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 லட்சம் உத்திராட்சங்களைக் கொண்டு சிவலிங்க வடிவில் ருத்ராட்ச சப்பரம் அமைக்கப்பட்டது. இந்த சப்பரத்தில் பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.