சிதம்பரம்: 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
சிதம்பரம்: 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்தியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து மதத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி கலந்து கொண்டார். மேலும், மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை சீர்செய்தனர். சுமார் அரை மணி நேரம் சிதம்பரம் காந்தி சிலை அருகே பரபரப்பாக காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி