கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது மாணவி 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த ராதாவிளாகம் பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன் குமாரசாமி என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.