கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் ரூபாய் 275 கோடிகள் மதிப்பீட்டில் நடைபெறும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகர மன்ற தலைவர் K. R. செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.