கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றை ஒட்டி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று நேற்று முன்தினம் (டிச. 25) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். 6 அடி நீளம், 150 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை குறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி முதலையை பிடித்து வக்கரமாரி ஏரியில் சென்று விட்டனர்.