சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி தேரோட்டம், ஜனவரி 13 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவுக்காக ஒவ்வொரு துறை சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.