சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரி 50க்கும் மேற்பட்டோர் பதிவாளர் அலுவலகம் முன்பு தற்போது தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு வரவேண்டிய ஆண்டு ஊதிய உயர்வு கடந்த ஏழு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் ஏழாவது குழு ஊதிய உயர்வு வழங்க வேண்டியும், தற்போது 23 பேருக்கு பணிநிரவல் மாறுதல் இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் தனி அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகின்ற வியாழக்கிழமை 700 க்கும் மேற்பட்ட தனி அதிகாரிகள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கின்றனர்.