கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 2025 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மூலவர் அங்காளம்மனுக்கு மாதுளை கனியில் உள்ள முத்துக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.