சாமியார்பேட்டை கடற்கரையில் குளிக்க தடை விதிப்பு

78பார்த்தது
சாமியார்பேட்டை கடற்கரையில் குளிக்க தடை விதிப்பு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் இயற்கையான சூழல் உள்ளதால் மாலை நேரங்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து ஓய்வெடுத்து செல்கின்றனர்.

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் ஓய்வெடுத்தும், கடலில் இறங்கி குளித்தும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் இங்கு கடலில் இறங்கி குளித்த சென்னை ஐ. டி. ஊழியர்கள் 2 பேர் சுழல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கடலோர பகுதியில் விஷ மீன்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இதன் காரணமாக சாமியார்பேட்டை கடலில் இறங்கி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக எச்சரிக்கை பதாகை மற்றும் பேனர்களை கடற்கரையில் காவல் துறையினர் வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி