குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் மாயம்
கடலூர் மாவட்டம் புவனகிரி சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியிருந்த பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரசாமி என்பவரின் மகன் ஜோதி முருகன் (வயது 13) என்ற சிறுவன் திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்குப் பதிந்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.