கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ் பெக்டர் லட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் காவல் துறையினர் புவனகிரி கடைவீதியில் உள்ள பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்த காவல் துறையினர் இது தொடர்பாக கடை யின் உரிமையாளர்கள் பூதவராயன்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வம், புவனகிரியை சேர்ந்த பக்கிரி மகன் நடராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 100 ற்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.