கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆக.,27) பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் இன்று (ஆக.,28) காலை நிலவரப்படி பரங்கிப்பேட்டை 1 சென்டி மீட்டர், குறிஞ்சிப்பாடி 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மற்றும் இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மழையினால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.