கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சு. கீணனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.