சேத்தியாத்தோப்பு: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

959பார்த்தது
சேத்தியாத்தோப்பு: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த காவலக்குடி காலனியை சேர்ந்தவர் பழனிவேல் இவர் கடந்த 4 ஆம் தேதி இரவு 10 மணியளவில் குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரது குடும்பத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அஙகிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி