கடலூர்: பாமக பொதுக்குழு கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்

60பார்த்தது
கடலூர்: பாமக பொதுக்குழு கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேத்தியாதோப்பு வேலவன் திருமண மண்டபத்தில் கடலூர் தெற்கு மாவட்டச் சார்பாக செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணியை முடித்திடவேண்டும். இளம் வாக்காளர்களை அதிக அளவில் உறுப்பினராக சேர்த்திடவேண்டும். 

சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் நல்வழிகாட்டுதலோடு, ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பாக நடத்திக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்க்கு கடலூர் மாவட்ட பாமக சார்பில் விரைவில் பாராட்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்படும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி