கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சி. புதுப்பேட்டையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி வேலு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் பரங்கிப்பேட்டை சென்றார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் வேலு தூக்கி எரியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.