கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறத. இந்த நிலையில் நேற்று ( செப்டம்பர் 10) தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் சதம் அடித்தது.
இதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் 100. 4 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர்.