கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் இரட்டைக்குளம் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ். நேற்று மின் கசிவு காரணமாக அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து புவனகிரி காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.