கடலூர் மாவட்டம் ஊ. மங்கலம் அடுத்த பொன்னாலகரம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணுசாமி மகன் ஜோதி இவர் இருசக்கர வாகனத்தில் ஊத்தாங்கால் பாரத ஸ்டேட் வங்கி ஏ. டி. எம். அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஜோதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊ. மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.