அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 100 நாட்கள் வேலை வழங்கிடு, ரூபாய் 319 கூலியை முழுமையாக வழங்கிடு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தை தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கிடு தொகுப்பு வீடுகளுக்கு பழுது நீக்கும் பணிக்கு 50000 ரூபாயை பழுதடைந்த அனைத்து வீடுகளுக்கும் வழங்கிடவும் வலியுறுத்தி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் வி. தொ. ச மாவட்ட தலைவர் S. G ரமேஷ்பாபு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் S. ஜீவா, ஒன்றிய செயலாளர் G. P கோபிநாத், ஒன்றிய பொருளாளர் M. அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.