கடலூர் மாவட்டம் புவனகிரி கிழக்கு யாதவ் தெருவைச் சேர்ந்த விஜயன் இவர் நேற்று முன்தினம் ஆடூரைச் சேர்ந்த நண்பர் ஜேம்ஸ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் சென்றனர். இருசக்கர வாகனத்தை விஜயன் ஓட்டினார். புவனகிரி அடுத்த கீரப்பாளையம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.