கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியோடு இணைந்து ரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை பாஜக மாவட்ட தலைவர் தமிழழகன் துவக்கி வைத்தார். இதில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.