பூதங்குடி: முருகன் மற்றும் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

65பார்த்தது
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பூதங்குடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது பின்னர் கடங்கள் புறப்பாடாகி ஆலயங்களை சுற்றி வலம் வந்து புனித நீர் கலசம் கோவில் கோபுரங்கள் மீது கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி