கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை வடக்கு பகுதியை சேர்ந்த துளசிமாலா இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபதைக்காக அருகில் உள்ள வயல் வெளி பகுதிக்கு சென்றார்.
அங்கு பாம்பு கடித்து மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற அவரது உறவினர்கள் மயங்கி கிடந்தவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக இறந்து தெரிவித்தனர். இது குறித்து புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.