கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி சட்டப்பேரவையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் இன்று வாசித்தார்.
இதில் கடலூர் மாவட்டம், நெய்வேலி என். எல். சி
இந்தியா நிறுவனத்திற்கு இரண்டாம் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அப்பகுதி விவசாயிகளுக்கு மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வு வழங்குவது குறித்து ஒரு சதவீத அக்கறை கூட இல்லாமல் நில எடுப்பில் அடிப்படை நடைமுறைகளை கூட நிறைவேற்றாமல். உதாரணத்திற்கு நிலங்களுக்கான இழப்பீடு வழங்காமல் விவசாயிகளுடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அரசும் என். எல். சி நிர்வாகமும் செயல்படுவதால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.